தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இப்போது பக்தர்கள் மனம் புண்படாதா?

6 Jul 2026, 9:21 pm
இப்போது பக்தர்கள் மனம் புண்படாதா?

இப்போது பக்தர்கள் மனம் புண்படாதா?

ஆர்எஸ்எஸ் - பாஜக தொடர்புடைய தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற்ற மோசடிகள், முறைகேடுகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின் றன. பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ராமர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட புத்தகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய முன்னாள் உள்துறை செயலாளர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ரூ.5 கோடி மதிப்பிலான தங்கமுலாம் பூசப்பட்ட ராமசரிதம் புத்தகத்தை அயோத்தி கோவிலுக்கு காணிக்கை யாக வழங்கியதாகவும், ஆனால் இந்த புத்த கம் பெறப்பட்டதற்கு ரசீது எதுவும் வழங்கப் படாத நிலையில், அந்தப் புத்தகம் மாயமாகி விட்டதாக கூறியுள்ளார்.

உ.பி., மாநில பாஜக அரசு காணிக்கை முறை கேடு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், இந்த கோவிலை நிர்வகித்து வரும் முக்கிய நிர்வாகிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 8 பேரும் ஓட்டுநர்கள், உதவியா ளர்கள் போன்றவர்களே ஆவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அறக்கட்ட ளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராய், பாஜக தொடர்புடைய அனில் மிஷ்ரா ஆகியோ ரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

இந்த முறைகேடு குறித்து ஆர்எஸ்எஸ், பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்க முன்வரா மல் நழுவுகின்றனர். இந்தக் கோவிலைக் கட்டி நிர்வகிப்பது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தான் என்றும், தங்களுக் கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் தப்பிக் கின்றனர். முறைகேடு தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கூட தகவல்க ளை அறிய முடியாத நிலையை ஏற்படுத்தி யுள்ளனர்.

அயோத்தியில் கோவில் கட்டுவதுதான் தங்களது லட்சியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியது. அதனுடைய துணை அமைப்புகளான பாஜக, விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் தான் பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாக அமைந்தன. ராமர் கோவில் கட்டப்பட்டதை தன்னுடைய அரசின் மிகப் பெரிய சாதனை என்று பிரதமர் மோடி தம்பட்டம் அடித்ததோடு, கோவில் நிர்மா ணத்தின் போது அனைத்திலும் அவரே முன்னின்றார். ஆனால் மோசடி புகார் அம்பல மானவுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். உண்மை யில் இந்தக் கோவிலை கட்டியதும் நிர்வகிப்பதும் ஆர்எஸ்எஸ் பரிவாரமே ஆகும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்து விட்டு அனைத்துக் கோவில்களையும் தங்களி டம் தரவேண்டுமென ஆர்எஸ்எஸ் - பாஜக கூறுவது அயோத்தி கோவில் கொள்ளையை இங்கும் அரங்கேற்றவே என்பது தெளிவு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.