ராமர் கோவிலில் தினமும் ரூ.8 லட்சம் நன்கொடை திருட்டு
6 Jul 2026, 9:14 pm

ராமர் கோவிலில் தினமும் ரூ.8 லட்சம் நன்கொடை திருட்டு

ரதமர் மோடி திறந்து வைத்த அயோத்தி ராமர் கோவிலில் பக் தர்கள் வழங்கும் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணத்தில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ள தாக எழுந்த புகாரை அடுத்து, உத்தரப் பிரதேச பாஜக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தினந்தோறும் அரங்கேறிய அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில்,“2025ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்தே ராமர் கோவிலின் நன்கொடைப் பணம் மிகத் திட்டமிட்ட முறையில் திருடப்பட்டு வந்துள்ளது. நாள்தோறும் சுமார் ரூ. 6 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை பணம் சத்தமில்லாமல் சுருட்டப்பட்டிருக்கலாம். இந்த திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு, வங்கியிலுள்ள ‘ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை கணக்கில் தினமும் சராசரியாக ரூ. 16 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு தணிக்கை தீவிரமாக்கப்பட்ட பிறகு, தற்போது தினசரி டெபாசிட் தொகை ரூ.24 லட்சம் முதல் ரூ. 26 லட்சமாக திடீரென அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் ஆவர். இவர்களின் மாத சம்பளம் வெறும் ரூ. 15,000 மட்டுமே. ஆனால், அண்மைக் காலங்களில் இவர் கள் ஆடம்பர வீடுகளைக் கட்டியதும், புதிய சொகுசு கார்களை வாங்கியிருந்த தும் காவல்துறை சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது” என எஸ்ஐடியின் விசாரணை யில் கூறப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது இந்த உள்ளடி வேலை?

எஸ்ஐடி அதிகாரிகள் நடத்திய சிசிடிவி காட்சிகளின் ஆய்வில், பணம் எண்ணும் அறையில் இருந்த ஊழியர் கள் சிலர், பணத்தை தங்களது பாக்கெட்டு கள் மற்றும் காலுறைகளில் (Socks) மறைத்து வைப்பதும், பின்னர் அதை கோவில் கழிவறைகளில் தற்காலிகமாக மறைத்து வைத்துவிட்டு, வெளியே எடுத்துச் செல்வதும் தெரியவந்துள்ளது. மேலும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் மற்றும் வெள்ளி நகை களின் முறையான வரவு-செலவு பதிவு கள் பராமரிக்கப்படாததால், திருடப்பட்ட நகைகளை உருக்கி தங்கக் கட்டிக ளாக மாற்றியிருக்கலாம் என்ற புதிய கோணத்திலும் விசாரணை தீவிர மடைந்துள்ளது.