முந்தய பக்கம்

“அயோத்தி ராமர் கோவிலில் பல கோடி ரூபாய் நன்கொடை காணவில்லையாம்!”

8 Jun 2026, 8:42 pm
“அயோத்தி ராமர் கோவிலில் பல கோடி ரூபாய் நன்கொடை காணவில்லையாம்!”

“அயோத்தி ராமர் கோவிலில் பல கோடி ரூபாய் நன்கொடை காணவில்லையாம்!”

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அரைகுறை கட்டுமானத்துடன் இருந்த அயோத்தி ராமர் கோவிலை தேர்தல் ஆதாய சிறப்பு ஷூட்டிங் உடன் திறந்து வைத்தார்.

இந்நிலையில், இந்த அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், தற்போது தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதா கவும் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மழுப்பலாக தெரிவித்துள்ளார். அதே போல உத்தரப்பிரதேச பாஜக அரசும் மவுனம் காத்து வருகிறது.

இதுதொடர்பாக சமாஜ்வாதி தலை வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ”ராமர் கோவிலில் நன்கொடை காணிக் கையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. இது கோவில் அறக் கட்டளைக்கு மிகவும் வெட்கக்கேடான நிலை. யாரும் எந்த விளக்கமும் அளிக்க முன்வரப் போவதில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், அரசின் மவுனம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது” எனக் கண்டனம் தெரி வித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram