ராமர் கோயில் நன்கொடை திருட்டு வழக்கு - ஒன்றிய, உ.பி அரசுகளுக்கு நோட்டீஸ்
13 Jul 2026, 3:08 pm

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடை முறைகேடாக கையாடல் செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலின் உண்டியல்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளதாக கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில் காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் 13-ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த 23-ஆம் தேதியன்று சிறப்பு விசாரணைக் குழு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்பித்தது.

அதில், கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 5 வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகளைத் தங்களது ஆடைகள், பாட்கெட் மற்றும் ஷூக்களுக்குள் மறைத்து வைத்த சுமார் 70 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 8 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை தனது பதிலை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு, கடந்த சிறப்பு விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.