அயோத்தி நிலக்கொள்ளையும் வரலாறு காணா பணமோசடியும் எளிய மக்களின் பக்தியைச் சூறையாடிய ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்
9 Jul 2026, 8:50 pm

அயோத்தி நிலக்கொள்ளையும் வரலாறு காணா பணமோசடியும் எளிய மக்களின் பக்தியைச் சூறையாடிய ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்

லக்னோ, ஜூலை 9 - அயோத்தி ராமர் கோவில் கட்டு மானப் பணிகள் மற்றும் நிலம் கையகப் படுத்துதலின் பெயரால், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உயர் மட்டப் புள்ளிகள் மற்றும் குஜராத் கார்ப்பரேட் முத லாளிகள் இணைந்து நடத்தியுள்ள வர லாற்றுப் பெருங்கொடுமையான நிலக் கொள்ளை மற்றும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இமாலயப் பண மோசடி ஊழல்களுக்குப் பொறுப் பேற்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. அயோத்தியில் அம்பலமாகியுள்ள - முன்னெப்பொழுதும் இல்லாத, மன்னி க்க முடியாத வரலாற்றுப் பெருங் குற்றம் மற்றும் நில அபகரிப்பு ஊழல் கள் குறித்து, லக்னோவில் ஜூலை 7 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தின் தேசிய நிதிச் செயலாளர் பி. கிருஷ்ண பிரசாத், தேசிய இணைச் செய லாளர்கள் பாதல் சரோஜ், முகுத் சிங் ஆகியோர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு மோடி-யோகி கூட்டுச் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினர்.

பக்தியைச் சூறையாடி சிறு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விஞ்சிய ஊழல்!

அயோத்தி ராமர் கோவிலுக்கு உல கம் முழுவதிலும் உள்ள கோடிக் கணக்கான ஏழை எளிய உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பி லிருந்து வழங்கிய காணிக்கைகள், தங்கம், வெள்ளி, வைரங்கள், நவரத்தி னங்கள் மற்றும் அஷ்டதாது சிலைகள் ஆகியவை ஒட்டுமொத்தமாகத் திரு டப்பட்டு, மோசடி செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் இந்தியா பாஜக ஆட்சியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஊழல் குறித்து வெளியாகும் புதிய திடுக்கி டும் உண்மைகள், இது வெறும் சில நூறு கோடி ரூபாய் ரொக்கப் பணம் சார்ந்த ஊழல் மட்டுமல்ல என்பதை நிரூபிக்கின் றன. திருடப்பட்ட தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற சிலை களின் மொத்த மதிப்பை கணக்கிட் டால், அது சில சிறிய நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விடப் பல மடங்கு அதிகமாகும். இந்த அதிகார வர்க்கக் கொள்ளையர் களின் துணிச்சல் எவ்வளவு பெரியது என்றால், இந்தியாவின் முன்னாள் ஒன் றிய உள்துறை செயலாளரே, தனது தங்க ராமாயணப் புத்தகம் காணாமல் போனது குறித்து பொதுவெளியில் கதறி அழுது முறையிடும் அவல நிலை ஏற்படும் அளவிற்குச் சென்றுள் ளது என்பதுதான்.

பழமைவாய்ந்த கோவில்கள் மற்றும் அரசு நிலங்களை வாரிச்சுருட்டிய குஜராத் கார்ப்பரேட் கும்பல்!

அயோத்தியில் நடந்துள்ளது வெறும் காணிக்கைத் திருட்டு மட்டு மல்ல; மாறாக இது இந்திய வரலாற்றி லேயே கண்டிராத மிகப்பெரிய நில அப கரிப்புச் சூழ்ச்சியாகும். சில நிமிட இடை வெளியில், அயோத்தியின் பூர்வகுடி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள், பல நூறு மடங்கு விலையேற்றப்பட்டு, ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் உள்ளிட் டோரால் பல நூறு கோடி ரூபாய் கை மாற்றப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஆவண ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஒன்றிய மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளின் முழுப் பாதுகாப்புடன், நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பழமையான கோவில்களும், அர சாங்கத்திற்குச் சொந்தமான நசுல் (Nazul) நிலங்களும் கூட இந்த நிலக் கொள்ளையர்களால் வாரிச் சுருட்டப் பட்டுள்ளன. இந்த நில பேரங்களில் குஜ ராத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதி பர்களும் கார்ப்பரேட் நிறுவனங் களும் நேரடியாகப் பயனடைந்துள் ளதன் மூலம், அயோத்தி என்பது ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு நெருக்கமானவர்களின் தனிப்பட்ட கொள்ளைக்கான தளமாக மாற்றப்பட்டுள்ளது அப்பட்ட மாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலக்கொ ள்ளைக்காக, தலைமுறை தலைமுறை யாக அங்கு வாழ்ந்து வந்த பல்லா யிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களும் சிறு வியாபாரிகளும் வலுக்கட்டாயமாக வீதிகளில் தூக்கி எறியப்பட்டு அவர்களின் வாழ்வாதா ரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைக் காக்கவே கண்துடைப்பு சிறப்புப் புலனாய்வுக் குழு!

இந்த மிகப்பெரும் ஊழல் அம்பலமாகி பல நாட்களுக்குப் பிறகும், இதுவரை முறை யான முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. மாறாக, எப்ஐஆர் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக ஒரு ‘சிறப்புப் புலனா ய்வுக் குழு’ (SIT) அமைக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான நோக்கம் குற்றவாளி களைக் கண்டுபிடிப்பது அல்ல; மாறாக அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதே ஆகும் என்று விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது இந்த எஸ்ஐடி குழுவால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனை வரும் வெறும் சில்லறைத் திருடர்கள் மட்டுமே. ஆனால், இந்த இமாலய ஊழ லின் பின்னணியில் இருக்கும் அறக்கட்ட ளைப் புள்ளிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் தடை யின்றி சுதந்திரமாக உலா வருகிறார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டே இந்த நில ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி யளித்திருந்தும், அதன் விசாரணை அறிக்கை இன்றுவரை பொதுவெளியில் வெளி யிடப்படாமல் மூடி மறைக்கப்பட்டிருப்பது, யோகியின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்கிறது.

மோடி - யோகி மற்றும் ஆர்எஸ்எஸ் கூட்டணியின் நேரடிப் பொறுப்பு!

“அயோத்தி ராமர் கோவில் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அவரால் திறந்து வைக்கப் பட்டு, அவரால் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையால் மட்டுமே நிர்வகிக்கப் படுகிறது. எனவே, அவரால் நியமிக்கப்பட்ட ‘அவர்களின் சொந்த ஆட்களே’ இந்த மாபெரும் காணிக்கைத் திருட்டிலும் நிலக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வ ளவு நடந்தும் பிரதமர் மோடி காக்கும் மௌ னம், இந்த ஊழலுக்கு அவர் அளிக்கும் மறைமுக ஒப்புதலையே காட்டுகிறது; இதி லிருந்து அவர் தப்பிக்க முடியாது” என விவ சாயிகள் சங்கம் இடித்துரைத்துள்ளது. மேலும், அயோத்தியின் முழு நிர்வாக மும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுக் கட்டுப் பாட்டில்தான் இயங்குகிறது. பிரதம ரால் அமைக்கப்பட்ட இந்த அறக்கட்ட ளை, ஆர்எஸ்எஸ்-இன் ஒரு பிரிவாகவே செயல்படுகிறது. இதன் பொதுச்செய லாளர் சம்பத் ராய் ஒரு முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியர் ஆவார். சட்டக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தலித் உறுப்பின ரும் கூட ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவரே. எனவே, இந்த வரலாற்றுப் பெரும் துரோகத்திலிருந்து ஆர்எஸ்எஸ் தங்களை ஒருபோதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.

விவசாயிகள் சங்கத்தின் அதிரடி முதன்மைக் கோரிக்கைகள்

சட்டத்தின் ஆட்சி மற்றும் பொது ஒழுக்கத்தை அப்பட்டமாகக் கேலிக் குள்ளாக்கியுள்ள இந்த சதித் திட்டத்திற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கைகள் வருமாறு: • உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாகத் தனது பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும். நியாய மான விசாரணை அவரது ஆட்சியில் சாத்தியமற்றது என்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

• உச்சநீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வை யில், காலவரையறைக்கு உட்பட்ட சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப் பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

• காணிக்கைத் திருட்டு மற்றும் நில ஊழல் மூலம் முறைகேடாக ஈட்டப்பட்ட அனைத்துப் பணமும், சொத்துகளும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும். • இந்த ஊழல் மூலம் பலனடைந்த அனைத்து அரசியல்வாதிகள், அதி காரிகள் மற்றும் கார்ப்பரேட் முதலாளி களின் பெயர்களை எவ்விதப் பாகுபாடு மின்றி பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

• நிலங்களை இழந்த பூர்வகுடி விவ சாயிகளுக்கும், அகற்றப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கும் 2013 நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின்படி, தற்போதைய சந்தை மதிப்பை விட 4 மடங்கு கூடுதல் இழப்பீடும், முறையான மறுவாழ்வும் வழங்கப்பட வேண்டும்.

• தற்போதுள்ள ஊழல் மலிந்த ராமர் கோவில் அறக்கட்டளையை உடனடி யாகக் கலைத்துவிட்டு, தென்னிந்திய மாநி லங்களில் உள்ளதைப் போன்ற முறை யான, வெளிப்படையான அரசு நிறுவன நிர்வாக முறையைக் கொண்டு வரவேண்டும்.