முந்தய பக்கம்

மரக்கன்றுகள் வழங்கி நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு

22 Mar 2026, 4:19 pm
மரக்கன்றுகள் வழங்கி  நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு
<p><strong>மரக்கன்றுகள் வழங்கி &nbsp;நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு</strong></p> <p>பெரம்பலூர், மார்ச் 22- &nbsp;தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் மரக்கன்றுகளை வழங்கி சட்டமன்ற தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளைகளில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வாசங்கள் மற்றும் தேர்தல் நாள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அவர் ஒட்டினார். &nbsp;பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் &ldquo;100 சதவீதம் வாக்களிப்போம்&rsquo;&rsquo;, &ldquo;எனது வாக்கு எனது உரிமை&rsquo;&rsquo;, &ldquo;என் வாக்கு விற்பனைக்கு அல்ல&rsquo;&rsquo; உள்ளிட்ட வாசகங்ளை அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க. கண்ணன் மற்றும் பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மு. அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram