விவசாய நிலங்களில் அதீத ரசாயன பயன்பாடு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு
5 Feb 2026, 3:40 pm

விவசாய நிலங்களில் அதீத ரசாயன பயன்பாடு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு

உதகை, பிப்.5– விவசாய நிலங்களில் அதீத ரசாயன பயன்பாட்டால், சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தவிர்த்து இயற்கை விவசாயத்தில் கவ னம் செலுத்த வேண்டும் என தோட்டக் கலைத்துறையினர் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றனர். நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப் படியாக மலை காய்கறி விவசாயம், 25 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவைகள் ஒவ்வொரு போகத்திலும், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, நீலகிரியில் நில வும் அசாதாரண சூழ்நிலையால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, மலை காய் கறி விவசாயம் எதிர்பார்த்த அளவு மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. விளை நிலங்களில் சமீப கால மாக மலை காய்கறிகள் மற்றும் தேயிலை உற்பத்திக்கு அதீத ரசாயன பயன்பாடு இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது. இதனால், மண் வளம் பாதிக் கப்படுவதுடன், சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த ரசாயன பயன்பாட்டால் நீர் நிலைகள் மாசடைவதுடன், வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள் ளது. மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட சில ரசாயனங்கள் குறித்து அதிகாரி கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடுக்க வேண்டும். விதி மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தடை செய்யப்பட்ட ரசா யனங்கள் குறித்து விவசாயிகள் அறி யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அழைப்பு விவசாயிகள் பயன்பெறும் வகை யில் ஒவ்வொரு தாலுகாவிலும் முதல்வ ரின் உழவர் நல சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. மானியம் வழங்கப்படுகிறது. சேவை மையம் அமைப்பதற்கு தகுதி யுடைய வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். அவ்வாறு அமைக்கப்படும் உழவர் நல சேவை மையங்களில் விவசாயி களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதி காரிகள் கூறுகையில், ‘விவசாய சாகு படிக்கு தேவையான அனைத்து திட்டங் களை தோட்டக்கலைத்துறை திறம்பட மேற்கொண்டு வருகிறது. காய்கறி தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ் வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்க இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். அதில் அதீத உரம், பூச்சிக் கொல்லி ஆகியவற்றின் விளைவு களை விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாக சார் பில் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயி களின் நலன் கருதி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அந்தந்த வட்டங்கள் சார்பில் தொடர்ந்து நடந்து வருகிறது, என்றனர்.

கவனம் தேவை!

இம்மாவட்டத்தில் நஞ்சநாடு, கக் குச்சி, கூக்கல், தும்மனட்டி, கேத்தி, அதிகரட்டி போன்ற பகுதிகளில் ஒவ் வொரு பயிருக்கும் பரிந்துரைக்கப் பட்ட அளவை விட உரம், பூச்சிக் கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆபத்தை உணர்த்தும் இது போன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபட வேண்டாம் என தோட்டக் கலைத்துறையினர் அறிவுறுத்தியுள் ளனர்.