முந்தய பக்கம்

எல்இடி திரை வாகனத்தில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு

2 Apr 2026, 3:50 pm
எல்இடி திரை வாகனத்தில்  குறும்படங்கள் மூலம்  விழிப்புணர்வு
<p><strong>எல்இடி திரை வாகனத்தில் &nbsp;குறும்படங்கள் மூலம் &nbsp;விழிப்புணர்வு</strong></p> <p>அரியலூர், ஏப். 2- &nbsp;அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரன்டு சட்டமன்ற தொகுதிகளில் முந்தைய சட்டமன்ற தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், 80 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் &nbsp;வாக்கு செலுத்துவது தொடர்பான விவரங்களையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன மின்னணு எல்இடி திரை வாகனம் மூலம் &nbsp;புதுப்பாளையம் ஊராட்சியில் குறும்படங்கள் ஓளிபரப்பு செய்யப்பட்டது. &nbsp;இதில், அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா மற்றும் இந்தியா வாக்குச்சாவடி அமைவிடம், வாக்காளர் பட்டியலில் பெயர் விவரம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக தெரிந்து கொள்வது, வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது ஜனநாயக உரிமை, போன்ற குறும்படங்கள் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஒளிபரப்பப்பட்டன. &nbsp;இந்த விழிப்புணர்வு குறும்படங்களை ஏராளமானோர் பார்வையிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram