மாற்று திறனாளிகள் தினம் மற்றும் எச்ஐவி விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி
12 Dec 2025, 3:12 pm
<p> மாற்று திறனாளிகள் தினம் மற்றும் எச்ஐவி விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.சங்கத்தின் செயலாளர் பெஞ்சமின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி, முனைவர் ஜானகி ராஜா, கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை நல அலுவலர் கதிரவன், சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ்கா, மற்றும் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
