தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

2 Apr 2026, 3:50 pm
திருச்சி விரைவு செய்திகள்

உவர் நிலத்தில் பறவைகளுக்கு  வளையமிடுதல் விழிப்புணர்வு

நாகர்கோவில்,ஏப்.2- புத்தளம் உவர்நிலத்தில் பறவைகளுக்கு வளை யமிடுதல் மற்றும் விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் உவர்நி லத்தில், பறவைகளுக்கு வளையமிடுதல், பறவைக ளை விடுவித்தல் மற்றும் பறவைகளைக் கவனித்தல் ஆகியவை குறித்த கள அடிப்படையிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வு  நிபுணர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் இயற்கை பாதுகா வலர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. இந்த அமர்வில் முருகப்பா குழுமத்தின் பிரதிநிதிகளான  வெங்க டாச்சலம் மற்றும் ஜெயேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வன அலுவலர் டாக்டர் அன்பு, பூதபாண்டி சரக அலுவலர்  அன்பழகன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் பிற வனத்துறை ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  வலசைப் பறவை களுக்கு முக்கியமான தங்குமிடங்களாகவும், உணவு தேடும் இடங்களாகவும் விளங்கும் புத்தளம் உவர்நிலம் போன்ற கடலோர வாழ்விடங்களின் சூழலியல் முக்கியத்துவத்தை இந்த அமர்வு வலியுறுத்தியது.

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா

கும்பகோணம், ஏப். 2-  தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பணி ஓய்வு பெறும் கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கிளைத் தலைவர்  இரா. முருகன் தலைமை வகித்தார். கல்லுரியின் முதல்வர் மா. மீனாட்சிசுந்தரம் மற்றும் கிளைச் செயலர் த. சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநிலப் பொதுச் செயலர்   சோ. சுரேஷ் உரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு, இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவர் சீ. தங்கராசு, பொருளியல் துறை இணைப் பேராசிரியர்  ம. சேதுராமன் மற்றும் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் இரா.ச. சுந்தரராஜன் ஆகியோர் இக்கல்வியாண்டின் மே மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகின்றனர்.  அவர்களுக்கான பாராட்டு விழாவில், மாநில துணைத் தலைவர் மதுரம், மாநில இணைச் செயலாளர் துர்கா தேவி, மாநிலப் பொருளாளர் பிரகாஷ், தஞ்சை மண்டலச் செயலாளர் சி.என். அண்ணாதுரை, சேலம் மண்டலச் செயலாளர்  லோகநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாரி, செயங்கொண்டம் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் க.ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் இரா. மோகன்ராஜ், இணைச்செயலர் சௌ. அசோக்ராஜ், புனித மூர்த்தி, பழனிச்சாமி மற்றும் கிளைக்கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர். கிளைத் துணைத் தலைவர் பா. கோபு அனைவருக்கும் நன்றி கூறினார்.

தீபம் ஏற்றியபோது  பெண் மீது தீப்பற்றியது

தஞ்சாவூர், ஏப். 2-  தஞ்சை பெரிய கோவிலில், புதன்கிழமை தஞ்சை சீனிவாசபுரம் செக்கடி பகுதியை சேர்ந்த பாலாமணி என்பவரது மனைவி வள்ளி(56), தீபம் ஏற்றினார்.  அப்போது எதிர்பாராவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று எரியத் தொடங்கியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.  அதற்குள் சேலை முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதனால் வள்ளி உடல் முழுவதும் தீப்புண்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மாற்று சேலை வழங்கி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு  வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை,  ஏப். 2-  புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வியாழனன்று இமெயில் மூலமாக கடிதம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்க ப்பட்டு வெடிகுண்டு கண்டுபி டிக்கும் கருவிகளோடு, நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்தனர். மேலும், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு அறை மற்றும் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் எதுவும் சிக்காததால் இது புரளி என தெரியவந்தது. காவல்து றையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.