தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் இடம்பெறுவதன் முக்கியத்துவம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

29 Dec 2025, 3:24 pm
வாக்காளர் பட்டியல் இடம்பெறுவதன் முக்கியத்துவம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
<p><strong>வாக்காளர் பட்டியல் இடம்பெறுவதன் முக்கியத்துவம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்</strong></p> <p>நாகர்கோவில், டிச.29- கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் &nbsp;ஆர்.அழகுமீனா, திங்களன்று (டிச.29) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: &nbsp;கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு குடிமக்களின் வீட்டிற்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 குறித்து, விளம்பரப்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் Election SIR Form 6 &ndash; Final date 18.01.2026 அச்சிடப்பட்டு, இன்று (29.12.2025) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வசிக்கும் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத குடிமக்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை (03.01.2026), ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) ஆகிய நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தங்களது பெயர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ள தங்களது விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடைசி நாளான 18.01.2026க்குள் &nbsp;வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.