முந்தய பக்கம்

தீய பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் !

11 Jan 2026, 7:00 am
தீய பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் !
<p>ராணிப்பேட்டை, ஜன. 11 &ndash; உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளை விக்கும் பொருட்களை அடியோடு ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வேத வல்லி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி மற்றும் திருமலை மிஷன் அறக்கட்டளை இணைந்து ஞாயிறன்று (ஜன. 11) மாரத்தான் ஓட்டம் மற்றும் வாக்கத்தான் நடைப்பயணம் நடை பெற்றது. &nbsp;போதைக்கு எதிராக தொடர்ந்து கடந்த &nbsp;33 ஆண்டுகள் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர் ஆ. கபிலனை பாராட்டும் விதமாக திருமலை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பூமாபார்த்தசாரதி சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார் மராத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கள் வழங்கி பாராட்டினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram