முந்தய பக்கம்

கல்லூரியில் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

27 Mar 2026, 3:15 pm
கல்லூரியில்  இளம் தலைமுறை  வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
<p><strong>கல்லூரியில் &nbsp;இளம் தலைமுறை &nbsp;வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு&nbsp;</strong></p> <p>மதுரை,மார்ச் 27- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக மார்ச் 27 அன்று மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற இளம் தலை முறை புதிய வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. &nbsp;இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;கே. ஜே.பிரவீன் குமார் பங்கேற்றுப் பேசினார். &nbsp;முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மன்னர் திருமலை நாயக்கர் &nbsp; கல்லூரி மற்றும் யங் இந்தியன்ஸ் சங்கம் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் முகத்தில் &nbsp;வர்ணம் வரைந்தும் தேர்தல் விழிப்புணர்வு பாடலுக்கு நடனம் ஆடியும், பலூன்களை பறக்கவிட்டு &nbsp;விழிப்புணர்வு ஏற்படுத்தினர். &nbsp;&nbsp; &nbsp; இந்நிகழ்ச்சியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா , திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வானதி , &nbsp;தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram