தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Dec 2025, 5:05 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

சின்னாளப்பட்டி, டிச.28- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் உள்ள  வண்ணம்பட்டி பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில்  எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கிராம விளையாட்டு மற்றும்  பசுமை மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பா ளர் பிரதீப் குமார் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். இலக்கு மக்கள் திட்ட மேலாளர் வினிஸ் குமார் முன்னிலை வகித்தார். இந்த விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் வண்ணம்  பட்டி, பாறைப்பட்டி, ஆத்தூர், மேட்டுப்பட்டி, கூத்தம்பட்டி  மற்றும் பேகம்பூர் ஞானபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  ஆறு அணிகள் பங்கேற்று, பொதுமக்களிடையே எச்.ஐ.வி /எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தின. போட்டியில் கலந்து கொண்ட அணிகளிடையே, ஆத்தூர் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோச கர் கண்ணன், எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான விழிப்பு ணர்வு தகவல்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் சீவல்சரகு ஊராட்சி ஒன்றிய செயலர் நடராஜன் நன்றி கூறினார்.

நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை தகவல்

திருவில்லிபுத்தூர், டிச.28- விருதுநகர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை மையமாகக் கொண்டு ஆண்டு தோறும் நடைபெறும் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு  தொடங்கியுள்ளது. வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த கணக்கெ டுப்பை வனத்துறை ஒருங்கிணைக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் தேர்வு  செய்யப்பட்ட வனத்துறை அலுவலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து  கொண்டனர். மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட  கண்மாய்கள் மற்றும் குளங்களில் அதிகாலை முதலே  கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் பறவை கள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக தெரி வித்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெ டுப்பு நிறைவடைந்த பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளை சார்ந்து வாழும் பறவைகளின் எண்ணிக்கை யும் வகைகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என வும் கூறினார். இந்த கணக்கெடுப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகனின் உத்தர வின் பேரில் நடைபெற்று வருகிறது. இராஜபாளையம் பகுதியில் நடைபெறும் கணக்கெடுப்பு பணிகளை இராஜ பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையில் வனத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி யில் நடைபெறும் கணக்கெடுப்பு ஏற்பாடுகளை இராஜ பாளையம் வனச்சரக அலுவலர் சரண்யா மற்றும் ஸ்ரீவில்லி புத்தூர் வனச்சரக அலுவலர் செல்வமணி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 25க்கும் மேற்பட்ட தேர்வு செய்யப்பட்ட கண்மாய்கள் மற்றும்  குளங்களில் இந்த நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

திருவில்லிபுத்தூர், டிச.28- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையா ளர் மணி, ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளர் முருகன், நகராட்சி–மாநகராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் வரவு–செலவு அறிக்கையை பொருளாளர்  ஆறுமுகம் தாக்கல் செய்தார். தொடர்ந்து துணைச் செயலாளர் பால சுப்பிரமணியம், மாரிமுத்து, குழு உறுப்பினர் சந்திரன், துணைத் தலை வர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் சின்னத்தம்பி உள்ளிட்ட பலர்  பேசினர். கூட்டத்தில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சங்கத்தின் சார்பில்  அடையாள அட்டை வழங்குவது, உறுப்பினர்களின் இல்ல நிகழ்ச்சி களில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது, புதிய நிர்வாகிகளின் பெயரில் வங்கிக் கணக்குகளை பராமரிப்பது  உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இராஜபாளையம் அருகே நாய் கடித்து 16 ஆடுகள் பலி

இராஜபாளையம், டிச.28- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் அருகே உள்ள ஜமீன்  கொல்லங்கொண்டான் கிரா மத்தில் விவசாயிகள் மற்றும் விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் அதி கம் வசிக்கின்றனர். இங்கு, பாண்டி  என்பவர் ஊராட்சி மன்ற அலுவல கம் அருகே ஆடுகளை கொட்டடி யில் வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது ஆட்டுக் கொட்டடிக்குள் புகுந்த நாய் ஒன்று, அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. ஆடுகள் சத்தம் கேட்டு அருகில்  இருந்த உரிமையாளர் பாண்டி விரைந்து வந்து நாயை விரட்டி அடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்த போது, 16 ஆடுகள் உயிரிழந்திருந் தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து இராஜ பாளையம் வட்டாட்சியர், கிராம  நிர்வாக அலுவலர், காவல்துறை யினர் மற்றும் கால்நடை மருத்துவ ரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் அருகே சேவல் சூதாட்டம் 7 பேர் கைது – ரூ.1.26 லட்சம், 62 டூவீலர்கள் பறிமுதல்

ஒட்டன்சத்திரம், டிச.28- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத் திய கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது  செய்யப்பட்டு, 62 டூவீலர்கள், ரூ.1 லட்சத்து  26 ஆயிரம் ரொக்கம் மற்றும் 7 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேடசந்தூர் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் பவித்ராவிற்கு கிடைத்த ரகசிய  தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சனிக்கிழமை இரவு குஜிலி யம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திண்டுக்கல்–கரூர் மாவட்ட  எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குஜி லியம்பாறை தாலுகா இலுப்பப்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து 7 பேரை கைது  செய்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து 62 டூ வீலர்கள், ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம்  மற்றும் 7 சேவல்கள் பறிமுதல் செய்யப் பட்டு, குஜிலியம்பாறை காவல் நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து, குஜிலியம்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னாமயில் வழக்குப்பதிவு செய்து, இலுப்பப்பட்டி தங்கராஜ் (40), மேட்டுப்பட்டி பாலமுரு கன் (40), ரெட்டை வாய்க்கால் செல்வ குமார் (49), ஊஞ்சலூர் கோபால் (35),  பாளையம் துரைச்சாமி (58), பேர்நாயக் கன்பட்டி கவின்குமார் (26), அரவக்குறிச்சி அரங்கசாமி (40) ஆகிய 7 பேரை கைது செய்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி  ஓடிய மற்ற நபர்களை போலீசார் தேடி வரு கின்றனர்.

தேனி மாவட்டத்தில் வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம்

டிச.30 அன்று நடைபெறுகிறது தேனி, டிச.28- மாநில நிலை வங்கிகள் குழு வழிகாட்டு தலின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம்  மற்றும் முன்னோடி வங்கி சார்பில், இந்திய  அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம்  தொடங்கப்பட்டுள்ள “உங்கள் பணம், உங்கள் உரிமை” திட்டத்தின் ஒரு பகுதி யாக, வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்பு ணர்வு நிதி தொடர்பான தீர்வு முகாம், வரும்  30.12.2025 அன்று தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் தங்களது  வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத  வைப்புத் தொகைகள் குறித்த தகவல் களை அறிந்து, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தொகைகளை திரும்பப் பெற முடியும். இதில், சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்  இயக்கப்படாத இருப்புகள், கால வைப்புத்  தொகைகளில் முதிர்வுத் தேதியிலிருந்து 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கோரப்படாத தொகைகள், பங்குகள், கோரப்படாத லாபங்கள் , பத்திரங்கள், கடன்பத்திரங்கள் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் கோரப்படாதவை, சிறுநிதித் திட்டங்கள், காப்பீடு, நிதியிருப்பு நிதி கள் – நிதி சாதனத்தின் வகையைப் பொறுத்து 7 முதல் 10 ஆண்டுகள் வரை கோரப்படாதவை, மியூச்சுவல் ஃபண்ட் அலகுகள் அல்லது அதன் லாபங்கள் – 3 ஆண்டுகள் வரை கோரப்படாதவை ஆகி யவை குறித்து தீர்வு காண முடியும். மேற்கண்ட உரிமை கோரப்படாத தொகைகளை, சம்பந்தப்பட்ட வைப்புத் தொகையாளர்கள் அல்லது இறந்த வைப்புத் தொகையாளர்களின் சட்டப்பூர்வ  வாரிசுகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட வர்கள், உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து வட்டியுடன் திரும்பப் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் சட்ட  வாரிசுகளாக இருப்பின் இறப்புச் சான்றி தழ், வாரிசுச் சான்று உள்ளிட்ட ஆவ ணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமில், வங்கிகள் சார்பில் டிஜிட்டல் ஹெல்ப் டெஸ்க் மற்றும் உதவி கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தேனி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கி நிறுவனங்களும் கலந்து  கொண்டு, படிவங்கள் நிரப்புதல், ஆவ ணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்க உள்ளன. எனவே, பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.