தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு பணி தீவிரம்

28 Jan 2026, 2:33 pm
2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு பணி தீவிரம்
<p><strong>2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு பணி தீவிரம்</strong></p> <p>மதுரை, ஜன.28- 2026 சட்டமன்றத் தேர்தலை முன் &nbsp;னிட்டு, மதுரை மாவட்டத்தில் மின் &nbsp;னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் &nbsp;மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு &nbsp;கருவி குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் &nbsp;பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு, முதல் கட்ட &nbsp;சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந் துள்ளன. இதனைத் தொடர்ந்து, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கில், 21.1.2026 அன்று அங்கீ கரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில &nbsp;அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 308 கட்டுப்பாட்டு கருவிகள், 308 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 308 வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் அந்தந்த 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் மற்றும் &nbsp;கருவிகள் குறித்த விவரங்கள் மற் &nbsp;றும் பட்டியல்கள், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங் &nbsp;கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது. இந்திய தேர் &nbsp;தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் &nbsp;களின்படி, பயிற்சி மற்றும் விழிப்பு ணர்வு நோக்கில் குறிப்பிட்ட இடங்க ளில் இந்த மின்னணு வாக்குப்பதிவு &nbsp;இயந்திரங்கள் வைக்கப்பட்டுள் ளன. மதுரை மாவட்டத்தில் மேலூர், &nbsp;மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை &nbsp;தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திரு மங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 10 சட்டமன்றத் தொகுதி களில், வட்டாட்சியர் அலுவலகங் கள், மாநகராட்சி மண்டல அலு வலகங்கள் மற்றும் தாலுகா அலு வலகங்களில் மின்னணு வாக்குப் &nbsp;பதிவு இயந்திரங்களின் செயல் முறை விளக்க மையங்கள் அமைக் &nbsp;கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 10 &nbsp;நடமாடும் செயல்முறை விளக்க வாகனங்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் முறை மற்றும் வாக் &nbsp;காளர் அளிக்கும் வாக்கு எவ்வாறு &nbsp;சரிபார்க்கப்படுகிறது என்பதையும் நேரடியாக விளக்கிக் காட்டப்படு கிறது. இந்த விழிப்புணர்வு நடவ டிக்கை, இந்திய தேர்தல் ஆணை யம் தேர்தல் அறிவிப்பு வெளி யிடும் வரை தொடர்ந்து நடை பெறும் என்றும், அதன் பின்னர் &nbsp;மின்னணு ஊடகங்கள் வாயிலாக &nbsp;மட்டுமே இப்பணிகள் மேற்கொள் ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.