தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யானைகள் நடமாட்டம் குறித்து வீடுகள்தோறும் விழிப்புணர்வு

20 Jan 2026, 2:46 pm
யானைகள் நடமாட்டம் குறித்து வீடுகள்தோறும் விழிப்புணர்வு
<p><strong>யானைகள் நடமாட்டம் குறித்து வீடுகள்தோறும் விழிப்புணர்வு</strong></p> <p>தருமபுரி, ஜன.20- பென்னாகரம் மற்றும் ஒகே னக்கல் வனச்சரக பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து வீடு கள்தோறும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து மாவட்ட வனத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில், ஒகே னக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதியிலிருந்து யானைகள் வெளி யேறி, அருகிலுள்ள கிராமங்களுக் குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், மனித - விலங்கு மோதலும் ஏற்ப டுகிறது. இதைத் தடுக்கும் வகை யில், தருமபுரி மாவட்ட வனச்சரக அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், பென்னாகரம், ஒகேனக் கல், முதுகம்பட்டி, தாசம்பட்டி, ஏரி யூர் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி யுள்ள கிராமப் பகுதிகளில், காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை கண்டறிந்து வனத் துறையினருக்கு தகவல் தெரி விக்க வேண்டும். யானைகளை விரட்ட பொதுமக்கள் முயற்சிக்கக் கூடாது. யானைகளை தொந்தரவு செய்வது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. வனவிலங்குகளை விரட் டும் பணியின்போது பொதுமக்கள் வனத்துறையினருக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 &nbsp;மணி வரை வயல்வெளிகள், வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிக ளுக்கு செல்லக்கூடாது. இரவு நேரங் களில் வயல்வெளியில் கொட்டகை கள், குடிசைகளை அமைத்து தங்கக் கூடாது. வனவிலங்குகளால் பயிர் &nbsp;சேதம், உடைமைகள் சேதம் ஏற்படும் போது, வனச்சரகத்திற்கு தகவல் &nbsp;தெரிவித்து உரிய ஆவணங்களு டன் மனு அளித்து நிவாரணம் பெறு வதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். வனப்பகுதியை ஒட்டி யுள்ள விலை நிலங்களில் அனுமதி யின்றி மின்வேலி அமைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். தாழ்வான மின்கம்பிகள் உள்ள இடங்கள் குறித்து வனத் துறைக்கும், மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண் டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோ கித்தனர். மேலும், யானைகள் நட மாட்டம் குறித்து பென்னாகரம் வனச் சரக அலுவலகத்தை 9943281939, 7939507567, 8270306018, 9944968255 என்ற எண்களிலும், ஒகேனக்கல் வனச்சரகத்தை 9443204275, 8870311007, 9843858225, 6374146273, 8825424736, 9659796093, 9442381320 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு வனத்துறை சார் பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.