100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
5 Apr 2026, 6:26 pm
<p><strong>100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு</strong> </p>
<p>ஓசூர், ஏப்.5- 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓசூர் சிறு குறு தொழில்கள் சங்கம் (ஹோஸ்டியா) மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய “வாக்கத்தான் “ விழிப்புணர்வு நடைப்பயணம் ஓசூரில் நடைபெற்றது. ஓசூர் ராமநாயக்கன் ஏரி மாநகராட்சி பூங்கா முன்பு துவங்கிய விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஹோஸ்டியா தலைவர் மூர்த்தி, பொருளாளர் ஸ்ரீதர்,முன்னாள் தலைவர் வடிவேல்,ஓசூர் சாராட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆக்ருதி சேத்தி, மாநகராட்சி ஆணையர் சபீர் ஆலம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.எனது வாக்கு விற்பனைக்கல்ல, தவறாமல் வாக்களிப்போம்,100% வாக்குப்பதிவே வலிமையான ஜனநாயகம் உள்ளிட்ட பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.</p>
