வேட்டவலத்தில் மதிப்பீடு நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
11 Jan 2026, 7:00 am
<p>திருவண்ணாமலை,ஜன.11- திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்தர் தனியார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள், கல்லூரி முதல்வர் ஸ்ரீதர், துணை முதல்வர் பலராமன் மற்றும் கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சேட்டு ஆகியோர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு 10 குழுக்களாக பிரிந்து 60 நாட்கள் விவ சாயிகளுடன் இணைந்து விவசாயம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்ற னர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில், ஒரு குழுவினர் விவசாயிகளுடன் இணைந்து, பல்வேறு வகையான விவசாய பயிர் சாகுபடி, பராமரிப்பு போன்றவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து கிராமப்புற மதிப்பீடு நுட்பங்கள் பணி அனுபவ திட்டத்தின் கீழ் சமூக வரை படம், வளங்கள் வரைபடம், விவசாயிகளின் அன்றாட நடவடிக்கைகள், வள வரைபடம், காலக்கோடு, சிக்கல் பகுப்பாய்வு படம் போன்ற கிராம மதிப்பீடு குறித்து கிராம நிர்வாக அலுவலர், கூட்டுறவு சங்க அலு வலர் மற்றும் விவசாயிகளுக்கு அரவிந்தர் தனியார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், வேட்டவலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ் காந்தி, கீழ்பெண்ணாத்தூர் குழு மாணவர்கள் குகன், ஹரிஷ், ஜெகன், கலையரசன், கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ் நிகிலேஷ் குமார், நிஷாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
