முந்தய பக்கம்

வாக்கு செலுத்துவது குறித்து விழிப்புணர்வு

17 Feb 2026, 3:36 pm
வாக்கு செலுத்துவது குறித்து விழிப்புணர்வு
<p><strong>வாக்கு செலுத்துவது குறித்து விழிப்புணர்வு</strong></p> <p>உடுமலை, பிப்.17- தமிழ்நாட்டில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, பொது மக்களுக்கு வாக்கு இயந்திரம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் கூடும் இடங்க ளில் மாதிரி வாக்கு சாவடிகள் அமைக்கபட்டு, வாக்கு செலுத்தும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. &nbsp;அதன் ஒருபகுதியாக வாக்கு இயத்திரத்தில் வாக்கு செலுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் &nbsp;உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கபட்டு உள்ளது. கடந்த வாரம் முதல் உடும லைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளிலும், அதே போல் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு சாவ டியை வருவாய் கோட்டாட்சியர் குமார் ஆய்வு செய்து பொது &nbsp;மக்களிடம் வாக்கு செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram