முந்தய பக்கம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

17 Mar 2026, 3:26 pm
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
<p><strong>வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு</strong></p> <p>திருப்பூர், மார்ச் 17- வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெ ழுத்து இயக்கம் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திருப் பூர் மாநகராட்சி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி &nbsp;பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் செவ்வாயன்று நடை பெற்றது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரண வரே துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, &nbsp;மாவட்ட &nbsp;ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, &nbsp;மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் &nbsp;(பயிற்சி) &nbsp;ஹர்ஷா, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி &nbsp;உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram