உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு</strong></p>
<p>நாமக்கல், டிச.28- உடலுறுப்பு தானம் மற்றும் போதைப்பொருளுக்கு எதி ரான சிந்தனை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது. ‘மக்களோடு நாம் இயக்கம்’ சார்பில் நாமக்கல் மாவட்டத் தில் முதல் முறையாக உடலுறுப்பு தானம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, கோவை ஜஆர்டி குழும தலைவர் ராஜேந்தி ரன், சாரா குரூப்ல நிறுவனர் ஸ்ரீதேவி மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இரண்டு கிலோ மீட்டர் முதல் 7 கிலோமீட்டர் வரை 6 பிரிவுகளில் 12 வயது முதல் 40 வயது வரை 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
