சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு</strong></p>
<p>நாமக்கல், டிச.28- திருசெங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு ஆகியவற்றின் இணைப்பில், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஞாயிறன்று ஹேக்கத்தான் இறுதிப்போட்டி (Hackathon Grand Finale) நடைபெற்றது. மாவட் டம் முழுவதுமிருந்து மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, மொபைல் பலவீனங்கள், ஏஐ மோர் பிங் கண்டறிதல், சமூக ஊடக மோசடிகள், டார்க் வெப் விழிப்புணர்வு போன்ற நிஜ உலக சைபர் சவால் களை எதிர்கொண்டு, தங்கள் புதுமையான தீர்வுகளை சைபர் குற்றப்பிரிவு விசாரணை நிபுணர்கள் முன்னி லையில் வழங்கினர். பரிசளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ். விமலா, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். விஜயராக வன், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். ஸ்ரீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கே.எஸ். சச்சின் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
