விழிப்புணர்வு மாரத்தான்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>விழிப்புணர்வு மாரத்தான்</strong></p>
<p>நாமக்கல், பிப்.2- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் திரு வள்ளுவர் வாசுகி நற்பணி மன்றத்தின் சார்பில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத் துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘போதையில்லா பயணம்’ என்ற தலைப்பில் ஞாயி றன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி யினை நகர்மன்றத் தலை வர் விஜயகண்ணன், காவல் ஆய்வாளர் தவமணி ஆகி யோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.</p>
