பல துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>பல துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள்</strong></p>
<p> சென்னை, பிப். 15- தடைகளைத் தாண்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஐந்து ஊனமுற்ற இந்தியச் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில், 24-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் விழா சென்னையில் சனிக்கிழமை (பிப்,14) நடை பெற்றது. இந்நிகழ்வில், பார்வையற்ற பெண்கள் கிரிக்கெட் கேப்டன் தீபிகா டி,சி, மற்றும் கேரளாவின் முதல் பார்வை யற்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தான்யா நாதன் ஆகி யோர் பங்கேற்று வெற்றியாளர்களைப் பாராட்டினர். இரு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. கல்வி, சட்டம், தொழில்நுட்பம் மற்றும் கலை எனப் பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய இவர்களை, மதன் கார்க்கி உள்ளிட்ட நிபுணத்துவம் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்தது. விழாவில் ‘ச ரி க ம ப’ வெற்றியா ளர் புருஷோத்தமன் மற்றும் அபிநயா ஷெண்பகராஜ் ஆகி யோரின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. குறிப்பாக, சைகை மொழி விளக்கத்துடன் கூடிய இந்த கலை நிகழ்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய சமூ கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. கவின்கேர் தலைவர் சி.கே. ரங்கநாதன் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவீந்திரன் பேசுகை யில், இந்த விருதுகள் வெறும் தனிநபர் சாதனைகளை மட்டும் கொண்டாடாமல், சமூகத்தின் பார்வையை மாற்றும் வலிமை கொண்டவை என்று குறிப்பிட்டனர். கடந்த 24 ஆண்டு களில் 100-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களை இந்த அமைப்பு அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
