பேராவூரணி மருத்துவருக்கு சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது
16 Dec 2025, 3:51 pm
<p><strong>பேராவூரணி மருத்துவருக்கு சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.16- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு கிளை மாநில மாநாடு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் மருத்துவர் துரை.நீலகண்டன். இவர் மருத்துவத்தோடு, மருத்துவம் சார்ந்த தகவல்களை எளிய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், ஏராளமான கட்டுரைகள், கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார். மேலும், இவரது மருத்துவமனை வளாகத்தில் முழு உருவ திருவள்ளுவர் சிலை அமைத்து தினம் ஒரு திருக்குறள் எழுதி வருகிறார். இந்நிலையில், “தூங்காத இரவுகள்’’ என்ற 13 கட்டுரைகளின் தொகுப்பு கொண்ட இவரது படைப்புக்காக, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்ட, இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழ்நாடு கிளை மாநில மாநாட்டில், “சிறந்த தமிழ் பணிக்கான மருத்துவர் பானுமதி முருகானந்தம் சிறப்பு விருது’’ வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருது பெற்ற மருத்துவர் துரை. நீலகண்டனுக்கு, பேராவூரணி பகுதி சமூக ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.</p>
