முந்தய பக்கம்

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசாமி கோவில் தேரோட்டம்

1 Jan 2026, 4:52 pm
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசாமி கோவில் தேரோட்டம்
<p><strong>ஆவுடையார்கோவில் ஆத்மநாதசாமி கோவில் தேரோட்டம்</strong></p> <p>அறந்தாங்கி, ஜன.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த ஆவுடையார்கோவில் ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஶ்ரீ ஆத்மநாதசாமி திருக்கோவில் மிகவும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாக &nbsp;கருதப்படுகிறது. &nbsp;திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திரு விழா நடைபெறுவது வழக்கம். இந்த &nbsp;ஆண்டு மார்கழி மாத திருவாதிரை திரு விழா டிச.24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழன் (ஜன.1) &nbsp;தேரோட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வந்தது. &nbsp;இதில் ஆவுடையார்கோவில் மற்றும் &nbsp;சுற்றுவட்டார பொதுமக்கள் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram