தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெயிலில் அதிக நேரம் இருந்தால் கவனம்: பாராசிட்டமாலை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுரை!

28 Apr 2026, 12:32 pm
வெயிலில் அதிக நேரம் இருந்தால் கவனம்: பாராசிட்டமாலை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுரை!

வெப்ப அலையால் உடலில் ஏற்படும் வெப்ப உயர்வை காய்ச்சலாக தவறாக புரிந்து கொண்டு பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் உடலின் வெப்பநிலை கணிசமாக உயரும். இதை சாதாரண காய்ச்சலாக எண்ணி பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறான நடைமுறையாகும் என்று பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெயிலில் நீண்ட நேரம் இருந்த பின் உடல் வெப்பநிலை அதிகரித்தால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் மோர், இளநீர், பழச்சாறு, ORS கரைசல் போன்ற திரவங்களை பருகுவது உடலை குளிர்விக்க உதவும். அதேபோல், ஈரமான துணியால் உடலை துடைப்பதன் மூலம் வெப்பத்தை குறைக்கலாம்.

இவ்வாறு செய்த பின்னரும் உடல் வெப்பநிலை குறையாவிட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில், கோடைக்காலத்தில் வரும் அனைத்து காய்ச்சல்களுக்கும் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற தவறான புரிதல் ஏற்படக்கூடாது. சளி, சிறுநீர் தொற்று போன்ற காரணங்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.