தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய வணிக வளாக குறைபாடு அவிநாசி நகர்மன்ற உறுப்பினர்கள் கொதிப்பு

27 Jun 2026, 12:54 am
புதிய வணிக வளாக குறைபாடு அவிநாசி நகர்மன்ற உறுப்பினர்கள் கொதிப்பு
<p><strong>புதிய வணிக வளாக குறைபாடு அவிநாசி நகர்மன்ற உறுப்பினர்கள் கொதிப்பு</strong></p><p>அவிநாசி, ஜூன் 26- பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து அவி நாசி நகர் மன்ற உறுப்பினர்கள் காரசாரமான கேள்வியை எழுப்பினர். அவிநாசி நகர்மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி தலைமையில், ஆணையர் அனு நந்தினி முன்னிலையில் நடைபெற்றது. இதில், பழைய பேருந்து நிலையம் முன்பு பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாக கீழ்த்தளத்தில், மழைநீர் வடிய வடிகால் வசதி இல்லாதது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். முந்தைய அதிகாரிகளின் அலட் சியமே காரணம் என ஆணையர் விளக்கமளித்த போது, பொறியாளர்களின் தொழில்நுட்ப ஆய்வு இருந்தும் இது எப்படி நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? என உறுப்பி னர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். முன்னதாக, விஸ்வபாரதி பார்க் பகுதியில் ஜல்லி கொட்டப்பட்டு 4 மாதங்களாகியும் சாலை அமைக்காதது, காமராஜர் வீதி தார்ச்சாலை பணி கிடப்பில் உள்ளது மற் றும் மங்களம் சாலை பொதுக்கழிப்பிட சீரமைப்பு உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சரவணன் (அதி முக), பர்கதுல்லா, தங்கவேல் (திமுக), ஸ்ரீதேவி ஜெய பால் (அதிமுக) ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தவெக உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், பொறியாளர் பணியை முறையாக செய் வதில்லை. புதிய லிப்ட் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஊழி யர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும், என்றார். கார்த்தி கேயன் (திமுக) 2-வது குடிநீர் திட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கோரி பதாகை ஏந்தி வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.