அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வாழ்த்து!
22 May 2026, 12:19 am
<p><strong>அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வாழ்த்து!</strong></p><p>அவிநாசி, மே 21- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவிக்கு வாலிபர் சங்கத்தினர் வாழ்த்து தெரி வித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கருக்கன்காட்டு புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 63 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவி அனுஸ்ரீ, 500க்கு 497 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், அதே ஊரை சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி, தனியார் பள்ளியில் கல்வி பயின்று 496 மதிப் பெண் பெற்றுள்ளார். இவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் அவிநாசி ஒன்றியக்குழு சார்பில், பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சந்தோஷ் குமார், செயலா ளர் வடிவேல், பொருளாளர் தங்கராஜ், பொதுத்தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபர் சங்க முன்னாள் செயலாளர் பழனிசாமி, சிபிஎம் கிளைச் செயலாளர் ராஜேஷ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரிமணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
