முந்தய பக்கம்

அவிநாசி அரசு பள்ளி மாணவர் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு

16 Nov 2025, 3:30 pm
அவிநாசி அரசு பள்ளி மாணவர்  கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு
<p><strong>அவிநாசி அரசு பள்ளி மாணவர் &nbsp;கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு</strong></p> <p>அவிநாசி நவ.16 அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேசிய அளவில் கிரிக்கெட் &nbsp;போட்டியில் பங்கேற்க தமிழக அணியில் தேர் வாகியுள்ளார். அவிநாசி அரசு பள்ளியில் எட்டாம் &nbsp;வகுப்பு படிக்கும் மாணவர் எம்.ராகேஷ்(13). இவரின் தந்தை முத்துக்குமார் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது அகில இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட் டமைப்பு நடத்தவிருக்கும் கிரிக்கெட் போட் டிக்கு, தமிழக அணிக்கான தகுதி தேர்வு டி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில், 14 &nbsp;வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரி வில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் அணியில் ராகேஷ் தேர்வாகியுள்ளார். இப் போட்டி 2026 ஜனவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த தேசியப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள மாணவர் ராகேஷை போட் டிக்குத் தயார் படுத்துமாறு, அவிநாசி அரசு பள்ளி நிர்வாகத்துக்கு திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ கம் முழுவதிலும் இருந்து 150 க்கும் மேற்பட்ட &nbsp;மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். &nbsp;தேசிய அளவில் தமிழகத்தைப் பிரதிநி தித்துவப்படுத்த உள்ள மாணவர் ராகேஷுக் குப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற் றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரி வித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram