அவிநாசியில் வெற்றிகரமாக நடைபெற்ற மூலதனம் காலை நேர தொடர் வகுப்பு
7 Oct 2026, 12:27 am

அவிநாசியில் வெற்றிகரமாக நடைபெற்ற மூலதனம் காலை நேர தொடர் வகுப்பு

திருப்பூர், அக்.6-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில், காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் காலை நேர தொடர் வகுப்பு அவிநாசியில் வெற்றிகரமாக நடைபெற்றது.காரல் மார்க்ஸ் எழுதிய வாழ்நாள் படைப்பான மூலதனம் நூல் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 10 நாட்கள் காலை நேர தொடர் வகுப்பு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவிநாசி ஒன்றிய அளவில் 5 நாட்கள் காலைநேர மூலதனம் தொடர் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காலைதொடங்கிய இந்த வகுப்பை, ஒன்றியக்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலிதொடங்கி வைத்து, மூலதனம் நூலின் வரலாற்று சிறப்பை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து இரண்டாம் நாள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.சாமியப்பன் தலைமையில், சரக்கின் இரட்டைப் பண்புகள் என்ற தலைப்பில் கல்விக்குழு சார்பில்வே.தூயவன், மூன்றாம் நாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமையில் பணத்தின் பரிணாமம், உபரி மதிப்பு என்பது பற்றி வி.ராமமூர்த்தி, நான்காம் நாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.வேலுச்சாமி தலைமையில் மூலதன அபகரிப்பும், உழைப்பாளிகள் அந்நியமாதலும் என்ற தலைப்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தௌ.சம்சீர் அகமது உரையாற்றினார். ஐந்தாம் நாள் நிறைவு நாளான செவ்வாயன்று மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியம், மூலதனம் வர்க்கப் போராட்டம் சோசலிசத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் நிறைவு செய்து உரையாற்றினார்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த வகுப்பில் அவிநாசி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சராசரியாக 50 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இந்த வகுப்பிற்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.