கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
10 Aug 2026, 1:02 am

கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

அவிநாசி, ஆக.9-பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கறவை மாடுகளுடன் பால்உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பசும்பால் லிட்டருக்கு ரூ.45, எருமைப்பாலுக்கு ரூ.60 என கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், செம்மம்பாளையம் பால் சொசைட்டி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்கத்தின் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

இதில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.வேலுச்சாமி, விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றியச் செயலாளர் பி.குமாரசாமி, பொருளாளர் என்.கருப்புசாமி மற்றும் 50-க்கும் மேற்பட்ட பால்உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர். அதேபோல், அவிநாசி ஒன்றியம், ச ஆதா

ரம்பாளையம் பால் சொசைட்டி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பி.குமாரசாமி, பொருளாளர் என்.கருப்புசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.