முந்தய பக்கம்

பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி!

19 May 2026, 11:46 pm
பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி!
<p><strong>பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி!</strong></p><p>அவிநாசி, மே 19- அவிநாசி பேருந்து நிலை யத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட வாலிபர் சங் கத்தினருக்கு நகராட்சி ஆணையர் பாராட்டு தெரி வித்தார். அவிநாசி நகராட்சிக்குட் பட்ட திருப்பூர் - கோவை சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் குப்பைகள் குவிந்தும், அழுக்குகள் படிந்தும் காணப்பட் டது. இதனை சீரமைக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வா யன்று நகராட்சி தூய்மைப் பணியாளர்களு டன் இணைந்து தீவிர தூய்மைப் பணியில் ஈடு பட்டனர். இப்பணியின் மூலம் பேருந்து நிலைய வளாகம் முழுமையாக சுத்தம் செய் யப்பட்டது. இதில், வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சந்தோஷ், செயலாளர் வடிவேல், பொருளாளர் தங்கராஜ், துணைச் செயலா ளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை நக ராட்சி ஆணையர் நேரில் அழைத்து வெகு வாக பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram