தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி - விசைத்தறி பூமியில் வீசும் மாற்றுக் காற்று

29 Mar 2026, 3:34 pm
அவிநாசி - விசைத்தறி பூமியில் வீசும் மாற்றுக் காற்று
<p><strong>அவிநாசி - விசைத்தறி பூமியில் வீசும் மாற்றுக் காற்று</strong></p> <p>கொங்கு மண்டலத்தின் இதயமாக வும், விசைத்தறி மற்றும் பனியன் &nbsp;தொழிலின் முகவரியாகவும் விளங்கும் அவி நாசி (தனி) தொகுதி, 2026 சட்டமன்றத் தேர் தலில் ஒரு மிக முக்கியமான அரசியல் மாற் றத்தை எதிர்நோக்கி நிற்கிறது. கடந்த காலங் களில் அதிமுகவின் கோட்டையாக கருதப் பட்ட இந்தத் தொகுதி, தற்போது அக் கூட்டணி எடுத்துள்ள முடிவுகளாலும், நிலுவை யில் உள்ள மக்களின் குமுறல்களாலும் புதிய திசையை நோக்கி திரும்பியுள்ளது. அவிநாசி சட்டப்பேரவை தொகுதி என்பது கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம் உள் ளடக்கிய சட்டப்பேரவை தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் 372 வாக்குச் சாவடிகளில் அன்னூரில் 139, அவிநாசியில் 233 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சி &nbsp;மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் உள்ளன. அவிநாசியில் சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும், அவிநாசி திருமுருகன்பூண்டி போன்ற பகுதிகளில் பனியன் தொழிற்சாலைகளும், தெக்கலூர் கருவலூர் புதுப்பாளையம் மற்றும் பல்வேறு இடங்களில் விசைத்தறி தொழிலும் நடைபெற்று வருகிறது. &nbsp;தீண்டாமை வேலியும், தீர்க்கப்படாத கோரிக்கைகளும் கடந்த இரண்டு முறையும் அதிமுக சார் பில் வெற்றி பெற்ற தனபால், தொகுதியின் அடிப் படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதே தொகுதி மக்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள் ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இத் தொகுதியில், முறையான வீட்டுமனைப் பட்டாக்கள், மயானப் பாதைகள், குடிநீர் வசதி போன்ற வாழ்வாதார கோரிக்கைகள் கடந்த பத்தாண்டுகளாக கிடப்பிலேயே உள்ளன. குறிப்பாக, சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டபோது &mdash; திரு மலைக்கவுண்டன்பாளையம் சத்துணவு ஊழியர் பாப்பாள் மீதான தாக்குதல் முதல் ராயம் பாளையம் பரிமளாவின் தற் கொலை வரை &mdash; ஒரு மக்கள் &nbsp;பிரதிநிதியாக ஆறுதல் கூட &nbsp;சொல்ல வராதது மக்களி டையே கடும் கொதிப்பை ஏற் படுத்தியுள்ளது.சபாநாயக ராக இருந்த போது தன் மீதான &nbsp;புகார்களிலிருந்து தப்பிக்க &nbsp;&rsquo;சாதி&rsquo;யைப் பயன்படுத்தியவர், சொந்தக் கட்சிக்காரர்களுக்கே துணையாக நிற்காதவர் என்ற பிம்பம் அவரி டம் ஒட்டிக்கொண்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி கூறுகையில், ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நூல் விலை ஏற்ற இறக்கம், காடா &nbsp;ஏற்றுமதி என்பது இல்லை, இந்த தொழிலில் &nbsp;பன்னிரண்டு மணி நேர வேலை தொழி லாளிக்குபாதுகாப்பு இல்லை, இன்சூரன்ஸ் திட்டம் அறிவித்ததன் மூலமாக தொழிலாளிகள் பல பயன்கள் அடைந்து வந்தனர் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டது. இத னால் பல சலுகைகள் கிடைக்காமல் போனது. மோடி அரசாங்கத்தால் 10 ஆண்டுகளில் இந்த &nbsp;தொழிலை கைவிட்டு போனவர்கள் 60% &nbsp;இருந்து வருகின்றனர். நவீன ரக விசைத் தறிக்கு பல சலுகைகள் தரப்படுகிறது. ஆனால் &nbsp;இந்த &nbsp;தறி பெரும் முதலாளிகள் மட்டுமே வைத்திருக்கிறார்கள். சாதாரண விசைத்தறிக்கு எவ்வித சலுகையும் கிடைப்பதில்லை. எதிர் காலத்தில் இந்த தொழிலை பாதுகாக்க சோலார் &nbsp;மின்சாரம் வழங்க வேண்டும், தொழிலாளிக்கு மருத்துவச் சலுகை கொடுக்க வேண்டும், இதன் மூலம் மட்டுமே இந்த தொழில் பாது காக்க முடியும் என்றார். எல். முருகன்: ஒரு &rsquo;ஆபத்தான அறிகுறி&rsquo;? தற்போது இத்தொகுதியை அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. வேட்பாளராக பார்க்கப் படும் மத்திய அமைச்சர் எல். முருகன் மீதான &nbsp;விமர்சனங்கள் அவிநாசியில் எதிரொலிக் கின்றன. தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையத் துணைத் தலைவராக இருந்தபோது, அலகு மலை தீண்டாமை வேலி விவகாரத்தில் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நின்றவர் என்ற &nbsp;குற்றச்சாட்டை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்வைக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி (GST) காரண மாக அவிநாசியில் ஆயிரக்கணக்கான சிறு பனி யன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அமைச்சராக இருந்தும், நலிவடைந்த விசைத் தறி தொழிலைப் பாதுகாக்கவோ, நூல் விலை &nbsp;ஏற்றத்தை கட்டுப்படுத்தவோ, தொழிலாளர்க ளுக்குச் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கொண்டு வரவோ எவ்வித முயற்சியும் எடுக் காத எல். முருகன் மீது தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். திமுகவின் புதிய நம்பிக்கை இந்தச் சூழலில், திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள 28 வயது இளம் மருத்துவர் கோகில மணி, தொகுதியில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு விவசாய கூலித் தொழிலாளியின் மகளாக, அதே மண் ணில் பிறந்து வளர்ந்தவர் என்பது அவருக்குப் &nbsp;பெரும் சாதகமாக உள்ளது. கடந்த சில &nbsp;ஆண்டுகளில் திமுக அரசு மேற்கொண்ட நட வடிக்கைகள் மக்களிடம் பேசுபொருளாகி யுள்ளன: திருமுருகன்பூண்டி மற்றும் அவி நாசியை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது. அரசு மருத்துவமனை மேம்பாடு மற்றும் டைடல் பார்க் (Tidel Park) அமைப்பதற்கான பணி கள். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடில்லா ஏழைகளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகள் ஆகியவைகள் திமுக விற்கு சாதக மாக பார்க்கப்படுகிறது. அவிநாசி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் விசைத்தறிகளுக்கு சோலார் மின்சாரம், கூலி உயர்வு மற்றும் நிறுத்தப்பட்ட இன் சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்து தல். நேந்திரன் வாழை விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அவிநாசியில் உழவர் சந்தை. திருமுருகன்பூண்டியில் நீண்ட நாள் கோரிக்கையான &rsquo;சிற்பக்கலை கல்லூரி&rsquo; அமைத்தல். சேவூர் பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் அத்திக்கடவு திட்டத்தில் விடு பட்ட குளங்களை இணைத்தல். அவிநாசி தொகுதி என்பது வெறும் வாக்கு வங்கி அல்ல; அது உழைக்கும் மக்களின் வியர்வை படிந்த பூமி. தங்கள் முதுகில் ஏறிக்கொண்டு வாக்குக் கேட்க வரும் மக்கள் நலனில் அக்கறையற்ற&rsquo; வேட் பாளர்களை புறக்கணிக்க அவி நாசி தயாராகிவிட்டது. அதிமுக வின் &rsquo;பருத்தி மூட்டைகளும்&rsquo;, பாஜகவின் &rsquo;பஞ்சு மூட்டைகளும்&rsquo; &nbsp;குடோன்களிலேயே முடங்கும். இப் போதைக்கு மக்களின் ஆதரவு தங்களுக்குள்ளிருந்தே உரு வான ஒரு &rsquo;இளம் மருத்து வருக்கே&rsquo; சாதகமாகத் தெரிகி றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.