விமான எரிபொருள் விலையும் உயர்வு!வணிகப் பயன்பாட்டு சமையல்
1 Nov 2026, 9:29 pm

விமான எரிபொருள் விலையும் உயர்வு!வணிகப் பயன்பாட்டு சமையல்

எரிவாயு சிலிண்டர் விலையேற் றத்துடன் சேர்த்து, விமான எரிபொருள் விலையும் லிட்டருக்கு ரூ. 1.37 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தில்லியில் விமான எரிபொருள் விலை ரூ.137.12-லிருந்து, தற்போதுலிட்டருக்கு ரூ.138.50 ஆக உயர்ந்துள்ளது.விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது இது நான்காவது மாதமாகும். முன்னதாக ஆகஸ்ட் 1 அன்று லிட்டருக்கு ரூ. 5, செப்டம்பர் 1 அன்று ரூ. 6.28 மற்றும் அக்டோபர் 1அன்று ரூ. 16 வரை உயர்த்தப்பட்டது.

விமானத்தைச் இயக்குவதில் ஊழியர்களின் சம்பளம், விமானப் பராமரிப்பு, விமான நிலையக் கட்டணங்கள் மற்றும் வாடகை ஆகியவைஇருந்தாலும், எரிபொருள் மட்டுமே 35% முதல் 40% வரையிலான மிகப்பெரிய தொகையைக் எடுத்துக்கொள்கிறது. அதனால் இந்தத் தொடர் விலை உயர்வு விமான சேவை நிறுவனங்களின் செலவினத்தை மேலும் அதிகரிக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.