முந்தய பக்கம்

பறவைக் காய்ச்சல்: சுகாதரத்துறை அறிவுறுத்தல்!

21 Mar 2026, 7:11 am
பறவைக் காய்ச்சல்: சுகாதரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கிண்டி பூங்காவில் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், இறைச்சிக்கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும். தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லைஎனவும் விளக்கமளித்டுள்ளது.
மேலும் இருமல், சளி, காய்ச்சல், சுவாசப்பிரச்னை போன்றவை பறவைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள். இருமல், சளி பாதிப்பு கொண்டவர்கள் சுய மருந்துகள் உட்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவரை அணுகுவது அவசியம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram