ஆவடியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது
12 hours before

ஆவடியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது

அம்பத்தூர், செப். 16-ஆவடி வட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு திண் ஊர்தி தொழிற்சாலையின் தலைமைப் பொது மேலாளர் விருது வழங்கி பாராட்டினார்.

ஆவடி விஜயந்தா முதுவர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை சஹோதயா சார்பில் ஆசிரியர் தின விழா ஆவடி டேங்க் பேக்டரி யில் உள்ள வள்ளுவர் வாசுகி திருமண மண்ட

பத்தில் நடைபெற்றது. இதில் ஆவடி வட்டா ரத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் முதன்மை விருந்தினராக திண் ஊர்தி தொழிற்சாலையின் தலைமைப் பொது மேலாளர் ஹரேகிருஷ்ண பெஹரா கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் விஜயந்தா முதுவர் மேல்நிலைப் பள்ளி

யின் தலைவர் நரேந்திரா, செயலர் ஆனந்தகுமார், பள்ளி முதல்வர்கள் கீதா, சுதா மாலினி, எஸ்தர் சத்தியவதி, ஷைலஸ்ரீ வசுநாத், ராமலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா, துணை முதல்வர் வளர்மதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.