ஆவடி காவல்துறையினர் சுவரோவியங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
4 hours before
<p><strong>ஆவடி காவல்துறையினர் சுவரோவியங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு</strong></p><p>ஆவடி, நவ. 6-ஆவடி காவல் ஆணையர் த.செந்தில்குமார் உத்தரவின் பேரில், ஆவடி காவல்ஆணையரக எல்லைக்குட்பட்ட பொதுஇடங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில்காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, பொதமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, குற்றங்களற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த சுவரோவியங்களில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள், இணைய வழி குற்றங்கள், சாலை போக்குவரத்து விதிகளைபின்பற்றுவது, அவசர கால எண்கள், குழந்தைகள்உதவி எண், இணைய வழிக் குற்ற உதவி எண்கள், பெண்கள் உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவைகள், பொதுமக்களிடம் சமூக பொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்த புரிதலை அதிகரிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
