தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

30 நாள் போனஸ் கேட்டு ஆவடி ஓசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1 hour before
30 நாள் போனஸ் கேட்டு  ஆவடி ஓசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

30 நாள் போனஸ் கேட்டு ஆவடி ஓசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், செப்.30-ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் 30 நாட்கள் போனஸ் வழங்கக்கோரி ஆவடி ஓசிஎப் தொழிற்சாலை முன்பு புதனன்று (செப். 30) அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் பேசுகையில், பாதுகாப்புத் துறை கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட பிறகு ஊழி யர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கடுமையான போராட்டத்திற்குப் பிறகே, தற்போதைய ஊழியர்கள் ஓய்வுபெறும் வரை அரசு ஊழி யர்களாகவே நீடிப்பர் என்ற உத்தரவைப் பெற முடிந்தது என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஓசிஎப் படை உடை தயாரிப்பு தொழிற்சாலையின் தலைமையகமான ‘ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்’ , போனஸ் சட்டத்தை மீறி 30 நாட்களுக்குப் பதிலாக 18.56 நாட்கள் மட்டுமே போனஸ் வழங்கப்படும் எனத் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. மேலும், போனஸ் கணக்கீட்டை ரூ.7,000 என்ற பழைய அடிப்படையில் கணக்கிடுவது ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிரானது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய உத்தரவின்படி ரூ.7,000 அல்லது நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் இதில் எது அதிகமோ அதன் அடிப்படையிலேயே போனஸ் கணக்கிட வேண்டும். தற்போது ஒன்றிய அரசு அறி வித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 என்பதால், ரூ.21,000-ஐ அடிப்படையாகக் கொண்டே 30 நாட்கள் போனஸ் வழங்க வேண்டும்.

தொழிற்சாலையில் போதிய உற்பத்தியின்மை, நியாயமான பீஸ் ரேட் வழங்காமை மற்றும் கடுமையான உழைப்புச் சுரண்டல் நிலவுவதாகச் சாடிய அவர், டிசிஎல் தலைமையகம் மற்றும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தார். குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் 30 நாட்கள் போனஸ்

வழங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.