தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மழைநீர் வடிகால் பணியில் குளறுபடி ஆவடியில் வணிகர்கள் சாலை மறியல்

9 Aug 2026, 12:16 am
மழைநீர் வடிகால் பணியில் குளறுபடி ஆவடியில் வணிகர்கள் சாலை மறியல்

மழைநீர் வடிகால் பணியில் குளறுபடி ஆவடியில் வணிகர்கள் சாலை மறியல்

அம்பத்தூர், ஆக. 8-வடி ரயில்வே மேம்பாலம் முதல் அரசு பொது மருத்துவமனை வரை உள்ள புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் டைமண்ட் ராஜா வெள்ளையன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் ஆவடி நேரு பஜாரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரனை சந்தித்து மனு அளித்தனர்.

அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், புதிய ராணுவ சாலையில் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வடிகாலை முறையாக அமைக்க அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என வணிகர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவடி வட்டாட்சியர் மூலம் சாலையின் எல்லையை நிர்ணயித்து வடிகால் பணியை முறையாக அமைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.