முந்தய பக்கம்

ஆவடி பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

2 Oct 2026, 2:15 am
ஆவடி பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

ஆவடி பகுதிகளில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

அம்பத்தூர், அக். 1 –ஆவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காமராஜர் நகர், ஜெ.பி. எஸ்டேட், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பழுதைச் சீரமைத்ததைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. அடிக்கடி ஏற்படும் இந்த மின் தடையைக் கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram