தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள்

12 Jun 2026, 10:37 pm
ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள்
<p><strong>ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள்</strong></p><p>சென்னை,ஜூன் 12- சென்னை ஆவடியில் உள்ள இந்திய விமானப் படையின் இயந்திரவியல் பயிற்சி நிறுவனத்தில் , 412 அக்னிவீர் வாயு வீரர்கள் வெள்ளியன்று (ஜூன் 12) நடைபெற்ற அணி வகுப்பின் மூலம் பாது காப்புப் படையில் இணைந்தனர். ஆட்டோமொபைல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இந்த அக்னிவீர் வாயு பயிற்சியாளர்கள், 18 வார கால தீவிரமான மற்றும் சவாலான தொழில்நுட்பப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கான &#39;பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளைத் தலைமையகத்தின் தொழில் நுட்பப் பயிற்சி அதிகாரி, ஏர் வைஸ் மார்ஷல் அதுல் லக்ஷ்மந்தாஸ் கோலானி கலந்துகொண்டு அணிவகுப்பைப் பார்வை யிட்டார். பயிற்சியாளர்க ளின் துல்லியம், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய பயிற்சி யாளர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவு ரவித்தார். இதில் ஜாதவ் வைஷ்ணவ் ராஜு என்பவர் &#39;சிறந்த ஆல்-ரவுண்டர்&#39; விருதினை வென்றார். பயிற்சி நிறைவு அணி வகுப்பில் உரையாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் அதுல் லக்ஷ்மந்தாஸ் கோலானி, &quot;உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அனைத்து அக்னிவீர் வாயு வீரர்களும் எப்போதும் விழிப்புடனும், எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிய தொழில் முறைத் திறன்களைக் கற்றுக்கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்ட வேண்டும்&quot; என்று அறி வுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.