முந்தய பக்கம்

எல்பிஜி கேஸ் நிரப்புவதற்காக வரிசை கட்டி நின்ற ஆட்டோக்கள்

10 Mar 2026, 5:48 pm
எல்பிஜி கேஸ் நிரப்புவதற்காக வரிசை கட்டி நின்ற ஆட்டோக்கள்
<p><strong>எல்பிஜி கேஸ் நிரப்புவதற்காக வரிசை கட்டி நின்ற ஆட்டோக்கள்</strong></p> <p>சென்னை, மார்ச் 10- எல்.பி.ஜி. கேஸ் நிரப்புவதற்காக சென்னையில் எரிவாயு நிலையங் களில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு நிலவி வருகிறது. அமெ-இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் இயங்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சென்னையில் எல்.பி.ஜி. நிலையங் களில் ஆட்டோ ஓட்டுநர்கள் குவிந்த னர். எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் எல்.பி.ஜி நிலை யத்தில் கேஸ் நிரம்ப ஆட்டோ ஓட்டு நர்கள் குவிந்தனர். எரிபொருள் தட்டுப் பாடு ஏற்பட்டால் தங்களது வாழ்வாதா ரம் பாதிக்கப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடன டியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram