தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக கூட்டணிக்கு தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கம் ஆதரவு

8 Mar 2026, 3:42 pm
திமுக கூட்டணிக்கு தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கம் ஆதரவு
<p><strong>திமுக கூட்டணிக்கு தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கம் ஆதரவு</strong></p> <p>சின்னாளப்பட்டி, மார்ச் 8- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி யில் தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கம் &nbsp;சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் &nbsp;வழங்கும் முப்பெரும் விழா நடைபெற் றது. இந்த விழாவிற்கு இயக்கத்தின் நிறு வனத் தலைவர் கிருபாகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் ஹேமா கிருபாகரன் மற்றும் மாநில துணைத் தலை வர் வழக்கறிஞர் காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலா ளர் வீரபாண்டி வரவேற்றார். விழாவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற வுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் செல்வாக்கு பெற்ற திமுக கூட்டணிக்கு தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கம் &nbsp;சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கு வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானத்தை ஊரக &nbsp;வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யிடம் வழங்கி ஆதரவை தெரிவித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரிய சாமி, சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தையல் இயந்திரங்கள், விளை யாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு &nbsp;நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் திமுக ஒன்றிய செயலா ளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பி னர் நடராஜன், நகர பொறுப்பாளர் பால கிருஷ்ணன் மற்றும் தன்னரசு மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் மாநில இணைச் &nbsp;செயலாளர் லட்சுமிநாராயண குணசேக ரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சிங்கத் &nbsp;தேவன், மாநில பொருளாளர் சௌந்தர் &nbsp;ராஜன், மாநில துணை ஒருங்கிணைப்பா ளர் லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் நிர்வாகிகள் சிவசங்கரி, ஷோபனா, மணிமேகலை, யமுனா, முத்தீஸ்வரி, ஜோதிலட்சுமி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.