15 நாளில் நடைமுறைக்கு வரும் தானியங்கி பட்டா மாறுதல்!
5 Jul 2026, 10:40 pm
<p><strong>15 நாளில் நடைமுறைக்கு வரும் தானியங்கி பட்டா மாறுதல்!</strong> </p><p> சென்னை, ஜூலை 5 - உட்பிரிவு அல் லாத சொத்துக் களுக்கான தானி யங்கி பட்டா மாறுதல், அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறை ப்ப டுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத சொத்துக்களுக்கு, பத்திரப் பதிவு முடிந்த வுடன் வாங்குபவர் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியாக பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது. தற்போதைய நடைமுறையில் சில இடர்பாடுகள் இருப் பதை அறிந்த முதல்வர், அவற்றை உடனடியாக களைந்து சேவையை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். இதை யடுத்து கடந்த ஜூன் 12 அன்று ஆய்வுக் கூட்டத்தில், மென் பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது. இதன் அடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 25.6.2026 அன்று அரசாணை 526-ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, நிலத்தை விற்பனை செய்பவரின் மனைவி, மகன், மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் கையொப்ப மிடும் பட்சத்தில் இச்சேவையைப் பயன்படுத்த வழிவகை செய்யப்படும். மேலும், பொது அதிகார பத்திரம் மூலம் பதிவு செய்யும்போது, விற்பனையாளர் பெயர் பட்டாதாரர் பெயரு டன் பொருந்தாத நிலையிலும், அது செல்லத்தக்க பொது அதிகார முகவர் என்பதன் அடிப்படையில் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதுதவிர, நிலத்தை வாங்குபவருக்கு அதே வருவாய் கிராமத்தில் ஏற்கெனவே நிலம் இருந்தாலும் இல்லாவிட்டா லும், தானாகவே அடுத்த பட்டா எண் ஒதுக்கப்படும் வகை யிலும் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் காலவிரயம் குறையும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
