சித்தூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
22 Nov 2025, 4:26 pm
<p>வேலூர், நவ 21 - வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் கோரி போராடிய ஆட்டோ சங்க தலைவர் ஹனிபா உள்ளிட்ட 7சங்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிந்து அராஜகமாக நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த காவல்துறையை கண்டித்தும், ஆட்டோ சங்க நிர்வாகிகள் மீது பதிந்த பொய்வழக்கை திரும்ப பெறுவதோடு அவர்களை விடுதலை செய்ய கோரியும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குடியரசு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன் காமராஜ் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தும் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் டி.முரளி, நிறைவு செய்தும் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ராமு உள்ளிட்டோர் பேசினர்.</p>
