ஆண்டிபட்டியில் ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
1 Mar 2026, 4:03 pm
<p><strong>ஆண்டிபட்டியில் ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தேனி, மார்ச் 1- ஆண்டிபட்டி பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மா.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் டி. வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலை வர் டி.ஜெயபாண்டி, மாவட்டச் செயலா ளர் ஐ. பாலகுருநாதன், மாவட்ட பொருளா ளர் ராஜ்குமார், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.மீனாட்சிசுந்தரம், எம்.தங்க ராஜ், கோதண்டராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர், சிஐடியு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க தலைவர் சி.பாலசந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏரா ளமான ஆட்டோ தொழிலாளர்களும் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கல்களை வெளிப்படுத் தும் வகையில் அமைந்தது.</p>
