முந்தய பக்கம்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 Oct 2026, 11:22 pm
ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட செயல் தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும். பிற மாநிலங்களைப் போல சீருடை மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்படுகிற மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ செயலியை அரசே உருவாக்கி செயல்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். ஓலா, உபேர், ராபிட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், எம். வீரபத்திரன், எ. சேகர், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கே. சரவணன், நிர்வாகிகள் அ.சேகர், என். பிரம்மா, வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram