முந்தய பக்கம்

பெண் குழந்தைகளின் கல்வித்திறனை  மேம்படுத்த ஆட்டோ  பேரணி

2 Mar 2026, 3:30 pm
பெண் குழந்தைகளின் கல்வித்திறனை  மேம்படுத்த ஆட்டோ  பேரணி
<p><strong>பெண் குழந்தைகளின் கல்வித்திறனை &nbsp;மேம்படுத்த ஆட்டோ &nbsp;பேரணி </strong></p> <p>சென்னை, மார்ச்.2- இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண் தொழில்முனைவோர் பங்கேற்கும் &ldquo;கோவா செல்வோம் 2026 ஆட்டோ ரிக்&zwnj;ஷா பேரணி திங்களன்று ( மார்ச் 2) &nbsp;சென்னையில் உற்சாகமாகத் தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்காக ₹1 கோடி முதல் ₹3 கோடி வரை நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்டு டேபிள் 42 &nbsp;மற்றும் லேடீஸ் சர்க்கிள் 7 (LC7) ஆகிய அமைப்புகள், இங்கிலாந்தின் &lsquo;தி சிஸ்டர்ஹூட்&rsquo; &nbsp;குழுவுடன் இணைந்து இந்தச் சர்வதேச நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. சேத்துப்பட்டில் நடைபெற்ற தொடக்க விழாவில், ரவுண்டு டேபிள் ஏரியா தலைவர் கரண் கோயல், தலைவர் சித்தார்த் ஷங்கர், லேடீஸ் சர்க்கிள் ஏரியா தலைவர் மோனிகா தர்ஷினி ஆகியோர் கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தனர். இந்த ரிக்&zwnj;ஷா பேரணி சென்னையிலிருந்து புறப்பட்டு வேலூர், பெங்களூரு, மைசூரு, பத்கல் வழியாக சுமார் 1,000 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாகக் கோவாவைச் சென்றடையும். 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட &lsquo;தி சிஸ்டர்ஹூட்&rsquo; குழு, கடந்த ஆண்டு நடத்திய பேரணி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வகுப்பறைகள் மற்றும் பெண்களுக்கான திறன் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram