கடன் வலையில் சிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
7 May 2026, 11:46 pm
<p><strong>கடன் வலையில் சிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!</strong></p><p>ஈரோடு, மே 7- எரிவாயு பற்றாக்குறையால் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் கடன் வலைக்குள் தள்ளப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசலை கடந்து வாக னங்கள் பல, எரிவாயுவால் இயங் கும் நிலையை அடைந்துள்ளன. அதில் பல மின்சார வசதிக்கு மாறி யுள்ளன. ஆனால், 3 சக்கர வாக னங்களான ஆட்டோக்கள், எல்பி ஜியால் தான் இயங்குகின்றன. இவர்கள் எல்பிஜி எனப்படும் எரி வாயு பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போருக்கு முன்பு, லிட்டர் 59 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் தடடுப் பாடு அதிகரிப்பால் படிப்படியாக உயர்ந்து 100 ரூபாயை எட்டியுள் ளது. ஒரு லிட்டர் நிரப்பினால், சுமார் 12 கிமீ இயக்க முடியும். அதற்கான வாடகை மிகக்குறைவு தான். கட் டுப்படியாகக் கூடிய வாடகையை அரசு நிர்ணயிக்க மறுத்து வருவது ஒருபுறம். தற்போது எரிவாயு பற் றாக்குறை ஏற்பட்டு விலையும் உயர்ந்துள்ளது. இதனால் சென்று திரும்பும் முழு நடையாக அமைந் தால் சமாளிக்கலாம். ஆனால் இறக்கி விட்டு திரும்ப வேண்டும் என்னும் நிலையில் மறு நடையில் காலியாக வர வேண்டும். இத னால் ஏற்படும் எரிபொருள் இழப்பு, ஆட்டோ வாடகை அல்லது கடன் தவணை செலுத்துவது பாதிக்கப் படும். இவ்வாறு கேஸ், ஆட்டோ வாடகை போக எஞ்சியிருப்பது தான் ஓட்டுநர் கூலி மற்றும் தேய்மானத்திற்கு கிடைக்கும். இந்நிலையில் பயணிகளிடம் கூடு தலாக கட்டணம் பெற முடியாது. கேட்டாலும் பல ஆப்புகள் அவற்றை பறிக்கும் நிலையில் உள் ளது. எனவே, வேறு வழியின்றி பலர் ஆக்டிங் டிரைவர்களாக மாறி வருகின்றனர். கடன் வலை யில் சிக்குகின்றனர். அதனை திருப் பிச் செலுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.</p>
